×

தக்காளி விற்று கோடீஸ்வரரான மராட்டிய மாநில விவசாயி: ஒரே மாதத்தில் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டினார்

மராட்டியம்: நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து இருக்கும் நிலையில் மராட்டியத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தக்காளி விற்றே கோடீஸ்வரராகி இருக்கிறார். தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகரித்து வருகிறது. தக்காளி விலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டியத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தக்காளி விற்றே கோடீஸ்வரராகி இருக்கிறார். மராட்டிய மாநிலம் புனேவில் பல ஆயிர ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிடப்பட்டு இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த துக்காரா போகேஷ் என்ற விவசாயி 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். அவர் ஒரு மூட்டை தக்காளியை ரூ.2,100-க்கு விற்பனை செய்திருக்கிறார். வெள்ளி கிழமை அவர் 900 மூட்டைகளை விற்பனை செய்துள்ளார். அதன் மூலமாக அவருக்கு ஒரே நாளில் ரூ.18 லட்சம் கிடைத்து இருக்கிறது. கடந்த மாதம் முழுவதுமாக ரூ.1.5 கோடி வரை ஈட்டி வந்திருக்கிறார்.

The post தக்காளி விற்று கோடீஸ்வரரான மராட்டிய மாநில விவசாயி: ஒரே மாதத்தில் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டினார் appeared first on Dinakaran.

Tags : Millian ,Maratium ,Maratham ,Millian Marathan ,Dinakaran ,
× RELATED அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு...